கைதான பிரபல நடிகை!

தமிழ், தெலுங்கு நடிகை சரயு ராய் இவர் கர்பூல், 3 ரோசஸ், தொல்லி பரிச்சயம் உள்பட பல தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

தற்போது யூடியூப் சேனல் ஒன்றையும் சரயு ராய் நடத்தி வருகிறார். இதில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சரியாக யூடியூபில் வெளியிட்ட வீடியோவில் இந்து கடவுள்களையும், மத நம்பிக்கையும் கேலி செய்து இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பின.

சரயு ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர். தெலுங்கானாவை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஐப்புரி அசோக் போலீசில் புகார் செய்தார். ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரயு ராவை கைது செய்தனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…