மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்பும் ஆளுநர் ரவி

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் மத்திய அரசு நலத்திட்ட உதவியை துவங்கி வைக்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரே மேடையில் மாறி மாறி வெவ்வேறு கருத்துக்கள் பேசியதால் பழங்குடி மக்கள் குழப்பம். ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சால் இந்திய நாடு வளர்ச்சி அடைந்ததா இல்லையா என்று கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் குழப்பமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி  ஜமுனாமுரத்தூரில் அருகே கோவிலூர் ஊராட்சியில் வனத்துறை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் விக்சிட் பாரத் சங்கல் யாத்ரா பழங்குடி மக்களுக்கான திட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக நம்  லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்கின்ற பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார் மேலும் வேளாண் உற்பத்தி பொருள் கண்காட்சிகளை பார்வையிட்ட ஆளுநர் இன்று பழங்குடி விவசாய வங்கி கடன்களை வழங்கினார்..

பின்னர் பழங்குடி மக்கள் முன்பு உரையாற்றிய ஆளுநர் பேசியது :- இந்தியாவில் 140 கோடி மக்கள் இருந்தும் துரதிர்ஷ்டமாக இன்னும் வளர்ச்சி பெறாத பின் தங்கிய நாடாகவே உள்ளது நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் வறுமை பசி பட்டினி என மக்கள் வறுமையில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்..

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் 1990ம் ஆண்டு சீனா நம் நாட்டுடன் சமநிலையில் இருந்தன ஆனால்  தற்போது பொருளாதாரத்தில் சீனா  வளர்ந்துள்ளன நமது நாட்டின் வளர்ச்சியின் பயணம் மிகவும் வேகம் குறைந்து காணப்படுகிறது என்றார்

நம் நாட்டில் பள்ளி கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி போன்ற கட்டிடங்கள் சாலைகள் போன்றவர்கள் இன்னும் நம் உயர்ந்த அளவிற்கு வளரவில்லை இன்னும் நாம் குறைந்த வளர்ச்சியே எட்டி உள்ளோம் என்று பேசினார்

இவ்வாறு பேசிய ஆளுநர் அதே மேடையில் பத்து நிமிடத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் நம் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றார்

பத்தாண்டுகளுக்கு முன்பு உலக பொருளாதாரத்தில் இந்திய நாடு 10வது இடத்தில் இருந்ததை தற்பொழுது முதல் மூன்று இடத்திற்கு  நமது பாரத பிரதமர் கொண்டுவந்துள்ளார். தற்பொழுது உலக நாடு பொருளாதாரத்தில் நாம் இந்திய நாடு வளர்ந்துள்ளது என்றார் 

தற்பொழுது பத்தாண்டு கால நம் நாட்டின் வளர்ச்சியை மற்ற நாடுகள் அதனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டி ருக்கின்றனர். இதற்குக் காரணம் நம் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றார் அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2047 ஆண்டில் இந்தியா முழு சுதந்திர பெற்ற நாடாகவும் தற்சார்பற்ற நாடாகவும் வளர்வதுதான் நமது பிரதமரின் கனவு திட்டம் என்று ஆளுநர் கூறினார்.

தனது உரை இறுதியில்   ஆளுநர் அனைவரிடமும் பாரத் மாதா கி ஜெய் ஜெய்ஹிந்த் என தெரிவித்தார் இவ்வாறு அரசு மேடையில் ஆளுநர் மாறி மாறி கருத்து தெரிவித்ததால் மலைவாழ்  பொதுமக்கள் குழப்பமடைடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *