அனுமதியின்றி வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றிய போலீசாரை மிரட்டி அராஜகம் செய்த பாஜக…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அண்ணாமலையின் நடை பயணத்தை வரவேற்று அனுமதியின்றி  அமைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டுகளை  அகற்றிச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசாரை மிரட்டி  வழிமறித்து மீண்டும் அதே இடங்களில் பேனர்களை வைத்து பாஜக வினர் அராஜகம்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன போக்குவரத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15, 17, 18 ஆகிய தேதிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. நடை பயணத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் கொடி தோரணங்கள் என பாஜக வினாரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாளை அண்ணாமலை நாகர்கோயிலில் நடை பயணம் வரும் பொழுது அவரை வரவேற்கும் விதமாக நாகர்கோயில்  மாநகராட்சி அனுமதி இல்லாமல் ஏராளமான பிளக்ஸ் போர்டுகளை சாலையோரமாக பாஜக சார்பாக  அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை வடசேரி போலீசாரும்,மாநகராட்சி அதிகாரிகளும் அகற்றி  அவற்றை வாகனங்களில் ஏற்றி சென்றனர்.

இதை அறிந்து அங்கு வந்த  குமரி மாவட்ட பாஜக  பொருளாளர் முத்துராமன் தலைமையில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிளக்ஸ் போர்டுகள் கொண்டு சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு மிரட்டியதோடு,போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் கட்சியின் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவதை கண்டிப்பதாகவும் அவ்வாறு போர்டுகளை அகற்றினால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடுவோம் எனவும் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர் பாஜகவினர்.

பின்னர் போலிஸாரால் அகற்றப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை எடுத்து சென்ற வாகனத்தின்  ஓட்டுனரை மிரட்டி  வாகனத்தை திருப்பி சொல்லி அதே இடங்களில் பிளக்ஸ் பேனர்களை பாஜக வினர் வைத்தார்கள். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *