பிரதமர் பதவி விலக வேண்டும் 234 தோகுதியிலும் போராட்டம்..! கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த்னர், அப்போது பேசிய அவர்கள்,

தமிழக ஆளுநர் சமீபக காலங்களில் சுவாரஸ்யமான மனிதராக மாறி உள்ளார்.மேலும் அவருடைய ஒரே நோக்கம் தமிழ்நாட்டில் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக தமிழக அரசுக்கு எதிராக சில கருத்துக்களை தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப சொல்வது தான் அவருடைய சிந்தனை என்று கூறிய அவர் எப்போதுமே இந்தியாவை, தமிழகத்தை பொறுத்தவரை அந்நியம் மூலதனம் கிடையாது தோற்றம் கிடையாது நம்மிடம் இருப்பது மனித வளம் தான் என்றும் ஆசிய நாடுகளில் அப்படித்தான் வளர்ச்சி ஏற்படுத்த முடியும் என்று கூறிய அவர் மோடி வந்துடன் தன் வளர்ச்சி வந்துள்ளது என்று ஆளுநர் ரவி கூறுகிறார் ஆனால் மோடி வந்தஉடன் 4.GTP வந்துள்ளது என்றும் நரசிம்மராவ்,மன்மோகன் சிங்,சிதம்பரம் இருக்கும் போதுதான் அந்நிய முதலீடு வளர்ச்சி அடைந்தது என்று தெரிவித்தார்,

மாநிலங்கள் பிரிந்தது கலாச்சார ரீதியாக பிரிக்கப்பட்டது என்று கூறிய அவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியாவை, அடையாளம் காண  தனித்தனியாக மாநிலங்களாக, அடையாளமாக காண  மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல என்றும் ஒரு மனிதனின் அடையாளம் மொழி தான் மேலும் ஒரு கிறிஸ்தவன்,இஸ்லாம் உலகம் முழுவதும் இருக்கிறான்,ஆகவே தமிழ் பேசுகிறார்கள் தமிழ்நாடு தெலுங்கு பேசுபவர்கள் ஆந்திரா என்று மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், நம்முடைய கலாச்சாரத்தை விட உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் 1500 வருடத்திற்கு முன்பு கட்டி இருக்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள் இந்த நாட்டில் கண்மூடித்தனமாகக் கலாச்சாரத்தை கொண்டு வரவில்லை கொள்கை ரீதியாக கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று கூறிய அவர் பாராளுமன்ற திறப்பு விழாவில் செய்த ஆதீனங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள்.. அப்போது முஸ்லிம்,இஸ்லாம் பௌத்த மக்கள் எங்கு  என்று கேள்வி எழுப்பிய அவர் பிஜேபி அலுவலகத்தில் சைவ ஆதீனங்களைக் கொண்டு திறந்து கொள்ளுங்கள் நாடாளுமன்றத்தை என் அப்படி திறக்க வேண்டும்..

10 ரயில் விபத்துகள்  நடந்தால் 7 ரயில் விபத்துக்கள் தண்டவாளம் பழுதடைந்துள்ளதால் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.மத்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறிய அவர் நாங்கள் இன்னும் ஒரு வார காலம் பார்ப்போம் அதற்குள் ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்க உள்ளோம்…

மல்லியுத்த வீரர்களுக்காக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்,மேலும் புதிய நாடாளுமன்றத்தை இந்த கால நிலைக்கு கட்ட தேவை இல்லை பழைய நாடாளுமன்றம் சிறப்பாக உள்ளது பெருமைக்காக அதனை வடிவமைத்து உள்ளனர்.மேலும் செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம்.நாங்கள் அதனை கண்டிக்கிறோம் மேலும் அது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.ரயில்வே துறை அமைச்சர் ஒரு வாரத்திற்குள் பதவி விலகவில்லை என்றால் 234 தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றும் செங்கல் நாடாளுமன்றத்தில் வைத்ததன் விளைவாக கர்நாடகத்தில் தோல்வி அடைந்தது போல் அடுத்த தேர்தலிலும் தோல்வியடையும் பிஜேபி என்று கூறிய அவர் என்னைப் பொறுத்தவரை ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *