இந்த கோடையில் மின்தடைக்கு வாய்ப்பே இல்லை… அமைச்சர் செந்தில் பாலஜி உறுதி. 

தேர்தல் குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாகி கடும் விமர்சனம் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி வைப்பதோடு நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.. இதனையொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை இரவு கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த திமுக சார்பில்  நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்து பரிசுகளை வழங்குவதாகவும், அதனைத் தொடர்ந்து வ உ சி மைதானத்தில் நடைபெறும் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் மாலையில் கொடிசியாவில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் 2000 திமுக முன்னோடிகளுக்கு பொற்கொடிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். 

சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பைத் துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, செங்கல் சூளைகளில் ஒரு சிலவை சட்டவிரோதமாக இருக்கலாம் ஆனால் முழுவதுமாக சட்டவிரதம் என்பது தவறான கருத்தாக பார்ப்பதாகவும், நீதிமன்றம் சுட்டிகாட்டி உள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கு நல்ல தீர்வு வரும் எனவும் அனுமதி இல்லாத செங்கல்பட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அனுமதியோடு இருக்கும் செங்கல் சூளைகளுக்கும் அறிவுறுத்துடன் வழங்கப்பட்டு இன்று உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

காரைக்குடி அருகே ஒரு கிராமத்தில் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளரை மட்டுமே மின் இணைப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் அல்ல என குறிப்பிட்ட செந்தில் பாலாஜி வருவாய்த்துறை ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மின் இணைப்பு  வழங்கப்படும் என தெரிவித்தார். ஏப்ரல் மே மாதங்களான கோடை காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது இதற்காக டெண்டர் கோரப்பட்டு டெண்டர் இது செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த செந்தில் பாலாஜி, மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *