என்னடா இது, மதுரைக்கு வந்த சோதனை! எய்ம்ஸ் அடுத்து… டைட்டில் பார்க்கா?! 

மதுரையில் மூன்றாவது டைட்டில் பார்க் அமைக்கும் இடம் உறுதி செய்யப்படவில்லை? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்.

மதுரையைச் சுற்றியுள்ள இலந்தைக்குளம், வடபழஞ்சியில் ஐ.டி பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன இதை தவிர பெரிதாக தொழில் வளர்ச்சிக்கு என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொழில் பூங்கா செயல்படப்படவில்லை. மேற்கண்ட இரண்டு இடங்களில் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறைவாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தென் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து மதுரையில் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் ரூபாய் 600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என்று தமிழக அரசு கடந்தாண்டு இறுதியில் அறிவித்திருந்தார். தென் தமிழகத்தின் இளைஞர்களின் கனவு திட்டங்களில் ஒன்றான மதுரையில் மூன்றாவது டைட்டில் பார்க் எப்போது அமையும் என்ற எதிர்பார்ப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மதுரையைச் சார்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜிஐஎம் துறை பதில் அளித்துள்ளது அதில், மதுரை மாட்டுத்தாவணியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள டைடல் பூங்கா எந்த பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு?

டைடல் பூங்கா அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என பதில் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை டைடல் பூங்காவிற்கான கட்டிட மாதிரி தயார் செய்யும் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்விக்கு? சந்தை தேவை மதிப்பீடு மேற்கொண்டு அதன் அடிப்படையில் கட்டிட மாதிரி தயாரிக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 

மேலும், மதுரை டைடல் பூங்கா அமையும் என எதிர்பார்க்கப்படும் இடத்தில் மதுரை மாநகராட்சி மார்க்கெட் அமைக்க நிர்வாகம் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய அனுமதியை ரத்து செய்து விட்டதா? என்பதை குறித்து ஏதேனும் மாநகராட்சியுடன் டைடல் நிறுவனத்தால் ஆலோசிக்க பட்டதா? என்ற கேள்விக்கு?

மதுரை டைடல் பூங்கா அமைக்க தகுந்த இடம் குறித்து முடிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பதில் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *