10 ரூபாய் நாணயம் புழக்கம்- ரிசர்வ் வங்கி தென் மண்டல இயக்குநர் சொன்ன நல்ல செய்தி!

coin

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குனர் எஸ்.எம். என்.ஸ்வாமி 74ஆவது குடியரசு தினத்தையொட்டி காவல்துறை அணிவகுப்பு மரியாதை உடன் கொடியேற்றி உரை நிகழ்த்தினார்.

ரிசர்வ் வங்கி தென்மண்டல இயக்குனர் எஸ் எம் எஸ் சுவாமி குடியரசு தின உரைரிசர்வ் பேங்க் சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் புகார்களை ரிசர்வ் வங்கி பிராந்திய மொழிகளில் வாங்க தொடங்கியுள்ளது.

அதன்படி 19000 புகார்கள் தமிழில் இதுவரை வந்துள்ளன அவற்றை விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அறிவை கொண்டு செல்வதற்காக கிராமப்புறங்கள் வரை சென்று பணியாற்றி வருகிறோம்.

விவசாயிகளுக்கான கிசான் அட்டை கடன் தொகையை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க மிகத் துரிதமாக செயல்பட்டு வருகிறோம். பத்து ரூபா நாணயங்கள் பொதுமக்கள் வாங்குவது மற்றும் போக்குவரத்து துறை வாங்குவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

உலகிலேயே அதிவேக டிஜிட்டல் பண பரிமாற்ற தளமாக யூபிஐ உள்ளது. 7.82 பில்லியன் பண பரிமாற்றங்களை யுபிஐ செய்துள்ளது அதில் 12.8 ட்ரில்லியன் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *