ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு

தமிழகத்தில் உள்ள 51 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தும் அதே நாளில் அந்த ஊர்வலத்தை எதிர்த்து விசிக தலைமையில் ஊர்வலம் நடத்த போவதாக அறிவித்தார். மேலும் இதற்கு நாம் தமிழர் கட்சி, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்நிலையில் திருவள்ளூரில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்திற்கு, காவல் துறையினர் மறுப்பு தெரிவித்தனர். திருவள்ளூரை தொடர்ந்து திருச்சி, கடலூர், வேலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சட்டம் – ஒழுங்கு பிரச்சனை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி தர உயர்நீதிமன்றம் பரிசீலிக்க கூறிய நிலையில், சட்டம்- ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *