பிரதமர் மோடி சிறந்த மனிதர் – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

பிரதமர் மோடி சிறந்த மனிதர் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டிரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவை பேணினேன். 

அதில் பிரதமர் மோடி சிறந்த நபர் அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். அவரது பணி அபாரமானது. இன்றும் அவர் எனக்கு சிறந்த நண்பன் தான். இந்தியாவுக்கு என்னைவிட சிறந்த நண்பன் இருந்ததே இல்லை என்றார்.

மோடி சிறந்த நபர்; அற்புதமாகப் பணிபுரிகிறார்' - நற்சான்றிதழ் கொடுக்கும்  ட்ரம்ப்!

கடந்த 2019 செப்டம்பரில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடந்த  ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிட்டியது. இதனை சுட்டிக்காட்டிய டிரம்ப் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடியைப் போல் தனக்கும் நல்ல ஆதரவு இருக்கிறது என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேள்விக்கு அதுவும் நடக்கலாம். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் கர்ஜிக்க செய்ய வேண்டும். இப்போது அமெரிக்க பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. 

அதை மீட்டெடுக்க வேண்டும். அதேபோல் அமெரிக்காவின் சுதந்திரத்தன்மை இன்னும் அதிகமான சக்தியுடன் திகழ வேண்டும். இது தான் எனது இலக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இந்த இரண்டையும் இழந்து உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *