குமரி மக்களே மழை பாதிப்பா?… இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உடனடியாக திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப் பாறை, ஆணைக்கிடங்கு, அடையாமடை, களியல், பாலமோர், ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் குழித்துறை, புத்தன் அணை பெருஞ்சாணி , சிவலோகம் ஆகிய இடங்களில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழையின் காரணமாக பேச்சிப் பாறை அணைக்கு 1565 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 990 கன அடி தண்ணீரும் சிற்றாறு ஒன்று அணைக்கு 256 கன அடி தண்ணீரும் சிற்றார் இரண்டு அணைக்கு 367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது பேச்சிப்பாறை அணையில் இருந்து 249 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து, நாகர்கோவில் மாநகராட்சியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உடனடியாக திறக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழை பாதிப்பு ஏதாவது இருந்தால் 04652 – 230984 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *