இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா உதவ தயாராக உள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பதற்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். 

இதில் இரு நாடுகள் இடையேயான சுமுக உறவு மேலும் வலுப்பெற உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். 

இலங்கைக்கு இந்தியா மேலும் 50 கோடி டாலர் கடன் உதவி | india gives 50 crore  dollar to srilanka - hindutamil.in

இதற்கு நன்றி தெரிவித்து திரௌபதி முர்மு தங்கள் வாழ்த்துக்கு நன்றி கூறிய நிலையில்  இலங்கையின் 8-வது அதிபராக நீங்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். 

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது தான் இந்தியாவின் கொள்கை. மிக நெருங்கிய நாடான இலங்கை தனது பொருளாதார நெருக்கடி சவால்களை சமாளிக்க உதவுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இரு நாடுகள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு, மக்கள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *