பிரதமர் மோடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் கைது..!!

பிரதமர் மோடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண்னை  கைது செய்து இருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா என்ற இடத்தில் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் பிரதமர் உள்ளிட்ட 60 பேர் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று சிறப்பு விசாரணைக்குழு கூறியது. இதை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே இது குறித்து போடப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.  

Gujarat riots: Meet Teesta Setalvad, the co-petitioner against PM Modi |  NewsBytes

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஸகியா ஜாப்ரி என்ற பெண்மணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  மனு தாக்கல் செய்தார். இவர் கலவரத்தில் உயிரிழந்த எக்சான் ஜாப்ரி என்பவரின் மனைவி ஆவார். உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 24ம் தேதி தனது தீர்ப்பை அறிவித்தது.

அதில், பிரதமர் மோடிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், போலி ஆவணம் தயார் செய்து அதை வைத்து பிரதமர் மோடி மீது பொய் குற்றம் சாட்டினார் என்று சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *