ஓபிஎஸ்ஸூக்கு முகமெல்லாம் ஒரே பூரிப்பு! ஓஹோ பிஜேபியா?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றின தகவல் கசிந்துள்ளது.. அத்துடன் திருச்சியில் நடத்தியுள்ள மாநாடு, திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி வருகிறது.இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்து இத்தனை காலமாகிவிட்ட நிலையில், இப்போதுதான் ஓபிஎஸ், பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தியிருக்கிறார்..ஒருவேளை முன்கூட்டியே இப்படியான மாநாட்டை கூட்டியிருந்தால், ஓபிஎஸ்ஸுக்கான பலம் மேலும் அதிகரித்திருக்கும்.. நிர்வாகிகள், எம்எல்ஏக்களிடமும் நம்பகத்தன்மையும் அதிகரித்திருக்கும்..போதுமான அளவுக்கு கீழ்மட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இப்படியான மாநாட்டை கூட்ட முடியும்.. அதுவும் குறுகிய காலகட்டத்தில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தி காட்டியுள்ளார் ஓபிஎஸ்.. இனி அடுத்தடுத்த மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது இந்த மாநாடு.

நீதிமன்ற உத்தரவுகள் எப்படி இருந்தாலும், பண்ருட்டியார் தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பதை போல, மக்கள் மன்றமும், தொண்டர்கள் பலமும் எங்களுக்கு இருக்கிறது என்பதைதான் ஓபிஎஸ் மாநாடு நிரூபித்துள்ளது.. அந்தவகையில், மக்களை நேரடியாக வந்து சந்தித்துள்ளார்.. தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்ட தொண்டர்களை தமிழகத்தின் மத்திய பகுதியில் வரவழைத்து, தன் பலத்தையும் ஓரளவு நிரூபித்துக்காட்டி உள்ளார்.. எத்தனையோ முட்டுக்கட்டைகளை எடப்பாடி தரப்பு போட்டும்கூட, அவைகளை முறியடித்துள்ளார்.ஆனால், மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் ஆச்சரியத்தை தரவில்லை என்றும், எடப்பாடிக்கு எதிராக ஒரு மாநாட்டை கூட்டும்போது, அதில், எடப்பாடிக்கு செக் வைக்கும் வகையில் தீர்மானங்கள் வலுவாக இல்லையே? என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.. அத்துடன், ஓபிஎஸ் இனி, என்ன செய்ய போகிறார்? அவரை நம்பியிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பிவிடுவார்களா? என்பல கேள்விகளையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.இதனிடையே, ஓபிஎஸ் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. “என் அறைகூவலை ஏற்று பங்கேற்ற, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி. மாநாடு.. வெற்றி அடைய பாடுபட்ட தொண்டர்கள், அரசியல் ஆலோசகர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸூக்கு இந்த மாநாடு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்.. காரணம், இந்த அளவுக்கு கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பே எதிர்பார்க்கவில்லையாம்.. இந்த மாநாடு தந்த கூட்டம்தான், அடுத்தக்கட்ட நகர்வையும், உற்சாகத்தையும் ஓபிஎஸ்ஸுக்கு தந்துள்ளதாம்..இதை மாநாட்டு மேடையில், பன்னீர்செல்வத்தின் முகத்திலேயே அதை பார்க்க முடிந்ததாக ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த மாநாட்டில், சசிகலாவின் பெயரை பலமுறை ஓபிஎஸ் உச்சரித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. மாநாட்டுக்கு சசிகலா, தினகரன் வரவில்லையானாலும், அவர்களின் மீதான நம்பிக்கையை ஓபிஎஸ் வெளிப்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது..அத்துடன், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் தன்னுடைய எதிர்கால திட்டத்தையும் மாநாட்டிலேயே சூசகமாக வெளிப்படுத்தியதையும் அதிமுக கவனிக்காமல் இல்லை. முதல்வராக்கிய சசிகலாவுக்கு பழனிசாமி பெரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று சொல்லி, சசிகலாவுக்கு ஆதரவு குரலை திருச்சியில் எழுப்பியிருக்கிறார் ஓபிஎஸ்..

சாதி முத்திரை விழுந்துவிடும் என்பதால்தான், இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், தினகரனும், சசிகலாவும் வராமல் தவிர்த்திருந்தனர்..ஆனால், மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்தே வந்திருந்தார்கள்.. அத்துடன், ஒருசமூகத்துக்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து கொண்டிருப்பதாக, அவர்களில் பலர் பொருமினார்களாம்.. அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டுமானால், சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் தற்போதைய திட்டமாக உள்ளதாம்..இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. போதுமான அளவுக்கு கீழ்மட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இப்படியான மாநாட்டை கூட்ட முடியும்.. அதுவும் குறுகிய காலகட்டத்தில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தி காட்டியுள்ளார் ஓபிஎஸ்.. அந்தவகையில், நிர்வாகிகளின் ஆதரவை கணிசமாகவே ஓபிஎஸ் பெற்றிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, டெல்லி மேலிட சப்போர்ட் இல்லாமல், ஓபிஎஸ்ஸால் இந்த அளவுக்கு அரசியல் செய்ய முடியாது என்ற சலசலப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலா + தினகரனின் ஆதரவையும் இந்த மாநாட்டில் ஓபிஎஸ் பெற்றுவிட்டதாக அவர்கள் ஆதரவாளர்கள் பூரித்து சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *