இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தின் மலாங் நகரத்தில் அமைந்துள்ள கஞ்சுருகான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அப்போது அரீமா அணியும், பெர்செபயா சுரபயா அணியும் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் 2க்கு 3 என்ற கோல் கணக்கில் அரீமா அணி தோற்றது. இதனால் ஆத்திரமடைந்த வீரர்கள் இதனை ஏற்க முடியாமல் அரீமா அணி ரசிகர்கள், மைதானத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு கலவரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், சம்பவத்தில் 127 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், கலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.