இத்தாலியில் பரபரப்பு: கடலில் மூழ்கிய சொகுசுப் படகு..!! நடந்தது என்ன..? 

இத்தாலியில் கடற்படையின் சாமர்த்தியத்தால் கடலில் மூழ்கிய கப்பலில் பயணம் செய்த 9 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் மத்திய தரைக்கடலில் தனியார் சொகுசுப் படகு கடலில் சென்று கொண்டிருந்த போது நிலவிய மோசமான வானிலையின் காரணமாக கப்பல் முழுவதும் கடலில் மூழ்கியது. 

130 அடி நீளம் கொண்ட அந்த படகில் 9 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். படகில் இருந்தவர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்ததால் அந்நாட்டு கடற்படையினர் விரைந்து சென்று படகில் பயணம் செய்பவர்களை பத்திரமாக மீட்டனர். 

படகில் 4 பயணிகள் மற்றும் 5 பேர் கொண்ட படகு குழுவினர் இருந்தனர். அனைவரையும் மீட்ட நிலையில் தொழில்நுட்ப காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த படகு கடலில் மூழ்குவதை தடுக்க முடியவில்லை.

Italy: Moment 40-metre superyacht sinks off the coast of Catanzaro | World  News | Sky News

 இது தொடர்பான வீடியோ பதிவை இத்தாலியின் கடற்படை வெளியிட்டுள்ளது. சகா என்ற  2007ம் ஆண்டு மொனாக்கோவில் தயார் செய்யப்பட்டது என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. 

கடற்கரையில் இருந்து 14.5 கிலோமீட்டர் தொலைவில் படகு இருக்கும் பொழுது கடலில் மூழ்கியுள்ளது. மேலும் கடற்படையினர் படகு மூழ்கியதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முனைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *