அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே திட்டம்..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் களமிறங்கிய இருக்கின்றனர். பல மாதங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு தற்போது ரணில் விக்கிரம சிங்க இலங்கை அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார்.

கோத்தபய ராஜபக்சே ஜூலை மாதம் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற கோத்தபய ராஜபக்சே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். 

கொதிப்பில் இலங்கை மக்கள்; அமெரிக்காவில் குடியேற திட்டம்... கிரீன்  கார்டுக்கு விண்ணப்பித்த கோத்தபய? | Gotabaya Rajapaksa Applies For Green  Card To Settle In US says ...

இதையடுத்து அங்கிருந்து தாய்லாந்து சென்றார். கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்புவார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையில் மக்கள் இன்னும் ராஜபக்சே மீது கோபத்தில் இருப்பதால், கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக அவருக்கும், அவர் மனைவி லோமாவும் சேர்த்து கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *