ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர்: அணுமின் நிலையம் மீது தாக்குதல்..!

அணுமின் நிலையம் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மேலும் ரஷ்ய படைகள் அணுமின் நிலையத்தை தாக்குதல் நடத்தும் ராணுவ தளமாக மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜபோரிஜியா சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதலில் அணு உலை ஒன்று சேதம் அடைந்து மூடப்பட்டது.

UN Security Council to meet Monday on humanitarian crisis in Ukraine | The  Times of Israel

இதைத்தொடர்ந்து, கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் அணுமின் நிலையத்தை சர்வதேச அணுசக்தி முகாம் குழு ஆய்வு செய்ய வசதியாக, அணுமின் நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் உக்ரைன் நிறுத்த வேண்டும் எனவும், சர்வதேச குழு உறுப்பினா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ரஷ்ய தூதர் மிகாயில் உல்யானோவ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *