உலகின் மிக அழகான பெண்ணாக மாற 15 அறுவை சிகிச்சை செய்த செர்ரி லீ

கிம் கர்தாஷியன் போல் மாற பிரேசில் மாடல் அழகி ஒருவர் 12 ஆண்டுகளாக 4 கோடி வரை செலவு செய்துள்ளார் தென்கொரியாவில் இளம் பெண்ணொருவரின் நடிகை போல் மாற ஆசைப்பட்டு, 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவழித்து உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

உலகின் மிக அழகான பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்ட தென்கொரிய இளம் பெண் செர்ரி லீ தனது உடலில் பல மாற்றங்களை செய்து கொள்ள ஆரம்பித்தார்.

பிரபல நடிகையான கிம் கர்தாஷியனை பின்தொடரும் செர்ரி லீ, அவரைப் போல மாற இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை தனது உடலின் முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அழகான பெண்ணாக மாற ஆசைப்பட்ட இளம்பெண் மேற்கொண்ட செயல்! - கனடாமிரர்

இதுகுறித்து செர்ரி லீ கூறுகையில், ‘கிம் கர்தாஷியனை பார்த்து வளர்ந்தவன் நான். அவரைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஒரு உந்துதலாக இருந்தவர்.

எனது பார்வைக்கு உலகின் மிக அழகான பெண்மணியாக தெரிந்தவர். நான் உண்மையில் முன்பு இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *