யார் சாமி இவன்: சும்மா இருந்து காசு சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞன்..!! 

ஜப்பானில் வசிக்கும் நபர் சும்மாவே இருப்பதாக சம்பளம் வாங்குகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ என்ற நபர் புதிய சேவை முயற்சியாக, ஒரு சுய தொழிலை உருவாக்கியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இதற்காக ஒரு ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து, அதன் மூலம் சேவையும் செய்யத் தொடங்கியுள்ளனர். மோரிமோட்டோவின் இந்த செயல் பலருக்கும் சலிப்பூட்டுவதாக இருந்தாலும், அவருக்கு ஒரு புறம் ஆதரவும் அதிகரிக்க தொடங்கியது. இன்று அவருக்கு 2,50,000 பேர் தொடர்கின்றனர்.

ஆரம்பத்தில் அவரின் நண்பர்கள், குடும்பத்தில் எதுவும் வேலை செய்யாமல் சும்மா இருக்கிறார் என அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் பின்னாளில் அதுவே அவரின் தொழிலாக மாறும் என ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் சேவை செய்ய தொடங்கியது, பலரிடம் சில வேலைகளை செய்ய முடியாது என்றும் தவிர்த்துள்ளார். அவர் செய்த சேவைகளில் தனியாக ஷாப்பிங் செல்பவர்களிடம் உடன் செல்வது, தனியாக பிறந்த நாள் கொண்டாடுவது, உணவகம் செல்வது என பல சேவைகளை அடங்கும்.

இவரின் இந்த சேவையை சம்பளம் கொடுத்து பெற இதுவரையில் கிட்டத்தட்ட 3000 கோரிக்கைகள் வந்துள்ளனவாம்.  கட்டணமாக வசூலித்ததாகவும், அதேபோல் 1 நாளைக்கு 3 கோரிக்கைகள் மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *