பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் தாக்கிய மர்ம நபர்..!

நியூ யார்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிவை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நேற்று (வெள்ளி) சென்றுள்ளார். அப்போது ஹாடி மாதர் (24) என்ற இளைஞன் கண் இமைக்கும் நேரத்தில் அவரை கத்தியால் குத்திட்டு அங்கிருந்து  தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இந்த தாக்குதலில்  சல்மான் ருஷ்டியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தி குத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

What is the 'Satanic Verses Controversy'?

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மேஜர் யூஜின் ஸ்டானிசெவ்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கான  நோக்கம் என்ன என்று  தெரியவில்லை. முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பான ஆதாரத்தை திரட்டி வருகிறோம் என்றார்.  இதற்காக 

எப்பிஐ அதிகாரியுடன்  நியூயார்க் போலீசும் இணைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார். இந்த சம்பவம் குறித்து  நியூயார்க்கின் சௌடாக்வா கல்வி நிறுவனத்தின் தலைவர் கூறுகையில் சல்மான் ருஷ்டி மேடையில் பேசுவதற்காக  தயாராக கொண்டிருக்கையில் திடீரென ஒரு மர்ம நபர் வந்து அவரை தாக்கி விட்டு தப்பித்து விட்டான் என்றார்.

பாதிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியை  ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சல்மான் ருஷ்டி  நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில் அவருக்கு கத்திக்குத்து பலமாக உள்ளதால் சிகிச்சை பின் அவரின் கண் பார்வை இழக்க கூடும். மேலும் அவரின் கல்லீரல் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.  

இந்திய  வம்சாவளியான சல்மான் ருஷ்டி மேற்கு நியூயார்க்கில் உள்ள சௌடாக்வா கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *