டெஸ்லாவின் அடுத்த அதிரடி..! கனடாவில் தொழிற்சாலை அமைக்க தீவிரம்..!  

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது கார்களை நேரடியாக விற்பனை செய்யப் பல சலுகைகளை கேட்ட நிலையில் மத்திய அரசு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தியது, இதற்காகப் பல கட்ட ஆலோசனைக்கு பின்பும் விற்பனைக்கு மறுத்தது.

இந்தியாவில் போட்டி தன்மையை நிலை நிறுத்த மத்திய அரசின் முடிவு சரி என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் டெஸ்லா போன்ற முக்கியமான மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனத்தை இழந்தது பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

Tesla Workers Allowed to Leave Shanghai Factory After Weeks: Report

டெஸ்லா அடுத்த சில ஆண்டுகளுக்குப் புதிய தொழிற்சாலையைத் திறக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடியாது என மறுத்துவிட்ட எலான் மஸ்க்-ன் டெஸ்லா தற்போது கனடா நாட்டில் அதிநவீன உற்பத்தி தளத்தை அமைக்க அந்நாட்டின் ஒன்டாரியோ மாகாண அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது. டெஸ்லா சமீபத்தில் தான் அமெரிக்காவில் டெக்சாஸ்-ல் புதிய தொழிற்சாலை திறந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா நிறுவனத்தின் கனடாவில்  தொழில்துறை கட்டமைப்புகளை திறக்க அனுமதிக்கும் விதிமுறைகளை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *