அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் திடீர் சோதனை.!! பின்னணி என்ன..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை அமெரிக்காவின் இருண்ட காலம் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை பெட்டிகளில் வைத்து எடுத்துச் சென்றதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தால் என்ன நடக்கும்? -  BBC News தமிழ்

இது தொடர்பாக நேற்று அவரது இல்லத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது டிரம்ப் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. 

எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை தனது பாதுகாப்பை சிதைக்கும் முயற்சி என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்றதாக புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *