பொருளாதார நெருக்கடியில் வங்கதேசம்..!! போராட்டத்தில் இறங்கிய மக்கள்..!!

வங்கதேசத்தில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை 52 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வங்கதேசத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 37 ரூபாய் உயர்ந்துள்ளது. இதே போன்ற, டீசல் லிட்டருக்கு 28 ரூபாய் 60 காசு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Economic Crisis Bangladesh: Roads of Bangladesh covered in blood, but  hundreds of people came out of their houses in a rage, what is happening in  the neighboring country?

விலையேற்றத்தை திரும்ப பெறக் கோரி, ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் வாங்கிச் செல்கின்றனர். கடந்த 6 மாதங்களில் பங்களாதேஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சுமார் 670 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டின் அமைச்சர் நஸ்ரூல் ஹமீத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *