இது சும்மா ட்ரைலர் தான்..!!  9 தொகுதிகளில் போட்டியிடும் இம்ரான் கான்..!

பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் 9 தொகுதிகளில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் போட்டியிடுகிறார். ஒருவர் ஒரே நேரத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுவது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான்.

ஆட்சி கவிழ்க்கப்பட்டது வெளிநாட்டு சதி என பாகிஸ்தான் தலைவர் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகிய சில தினங்களில் பாகிஸ்தான் சேர்ந்த ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் அரசியல் சாசன சட்டத்தில் ஒருவர் எத்தனை தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை.

இதனைப் பயன்படுத்தி 9 தொகுதிகளில் போட்டியிட இம்ரான்கான் முடிவு செய்துள்ளார். 9 தொகுதிகளில் இம்ரான்கான் வெற்றி பெற்றுவிட்டால் அதில் ஒன்று மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற 8 தொகுதிகளில் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது அந்த 8 தொகுதிகளில் அடுத்த 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே இம்ரான்கானின் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் 9 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அறிவித்தது.

இதையடுத்து இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் விதமாகவும் இம்ரான்கான் 9 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *