சபாநாயகர் நான்சி பெலோசி பயணம்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது – சீனா

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்கு சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். 

நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது. நான்சியின் வருகை காரணமாக தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. 

US House Speaker Nancy Pelosi Lands In Malaysia Amid China Rage: Report

இதையடுத்து, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்தது. இந்தச் சூழலில் தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது ட்விட்டர் பக்கத்தில் சீனா வேண்டும்மென்றே ராணுவ அச்சுறுத்தலை தைவானுக்கு, சர்வதேச சமூகத்துக்கும் அளிக்கிறது.

எங்கள அரசும், ராணுவமும் சீனாவின் ராணுவம், போர் பயிற்சிகளை கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்பாட்டால் சீனாவிற்கு எதிராக தைவான் எதிர்வினை ஆற்ற தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *