அணு ஆயுதப் போர் உலக அளவில் அதிகரித்து வருகிறது – விளாடிமிர் புதின்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால், அணு ஆயுதப் போர் குறித்த பேச்சு உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அணு ஆயுதப் போர் யாருக்கும் வெற்றியைத் தராது என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் நாட்டுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனது உரையை வழங்கியுள்ளார். அதில் அணு ஆயுத போர் யாருக்கும் வெற்றியைத் தராது என்பது உண்மை என தெரிவித்துள்ள அவர், எனவே, அணு ஆயுதப் போர் தொடங்கப்பட கூடாது என்றார்.

Dirty Bombs.." அணு ஆயுதங்களை மிக ரகசியமாக தயாரிக்கும் உக்ரைன்.. ரஷ்யா பகீர்  குற்றச்சாட்டு | Ukraine Making Nuclear "Dirty Bomb" In Chernobyl, Alleges  Russia - Tamil Oneindia

அவரது இந்த பேச்சு, உக்ரைன் போர் தீவிரமடைந்தால் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தாது என்ற உத்தரவாதத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதையே காட்டுகிறது என சர்வதேச சபை கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் புடினின் இந்த பேச்சு அவர் ஏற்கனவே கூறியதற்கு முரணாக இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவர் இந்த  கருத்தை தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *