வங்கி மோசடி வழக்கு: அதிரடி சோதனையில் சிக்கிய ரூ 34 ஆயிரம் கோடி ரூபாய்..!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி ஒன்றாக டிஎச்எஃப்எல் மோசடி கருதப்படுகிறது. திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மோசடி என்று அழைக்கப்படும் இதில் சுமார் ரூ 34 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

வங்கி மோசடி வழக்கில் தொழிலதிபர் அவினாஷ் போன்சேலுக்கு சொந்தமான இடத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும்  அவினாஷ் போன்சேல். புனேவில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவினாஷ் போன்சேலுக்கு சொந்தமான வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பறிமுதல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Tamil_News_large_2731923.jpg

வங்கி மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில் போன்சேலுக்கு சொந்தமான இடத்தில் இந்த ஹெலிகாப்டரை அதிகாரிகள் கைப்பற்றினர்.  அவினாஷ் இதை சமீபத்தில் தான் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டிஎச்எஃப்எல் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ரெய்டில் இந்திய மேஸ்ட்ரோக்கள் எஃப்எம் சௌசா மற்றும் எஸ் ஹெச் ராசா ஆகியோரின் ஓவியங்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.