ஈரான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!!  இதுவரை 24 பேர் உயிரிழப்பு..!!

ஈரான் நாட்டில் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை  வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்த கனமழையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.  

தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் மேலும்  சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனை அடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்டெஃபென் நகரில் கனமழை கொட்டித் தீர்த்தது ரவுட்பெல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.