வரி மோசடி செய்த பிரபல பாப் பாடகி..!! சிறை தண்டனை செல்ல வாய்ப்பு..!!

கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகீராவுக்கு வரி மோசடி புகாரில் ஸ்பெயினில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது இசை ஆல்பங்கள் மூலம் இசையுலகில் கொடிக்கட்டி பறந்த இவர் உலகம் முழுவதும் இசைப் பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடியும் வருகிறார்.

3 கிராமி விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு காலத்தில் ஸ்பெயினில் இருந்தபோது, 116 கோடி ரூபாய் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குரலால் மயக்கும் ஷகீரா காலை எப்படி வளைக்கிறார் பாருங்க..! | Her hips really  don't lie! Shakira reveals her circus contortionist skills and puts her  legs behind her head | குரலால் மயக்கும் ...

ஆனால் 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு முழுமையாக ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பியதாகவும், தற்போது வரை அதாவது 136 கோடி ரூபாய் வரி பணத்துடன் தனது அனைத்து விதமான வரிகளையும் முழுமையாக, வருமான வரி அலுவலகத்தில் செலுத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தான் குற்றமற்றவர் என்பதால், நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்தித்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள ஸ்பெயின் நாட்டு வழக்கறிஞர்கள் தற்போது வருமான வரி வழக்கின் மனுவை ஷகிரா நிராகரித்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும் போது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஷகீராவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் வரி ஏய்ப்பிற்காக 150 கோடி ரூபாய் அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…