ஈரானில் அதிகரிக்கும் தூக்கு தண்டனை..!! ஒரே நாளில் 3 பெண்களுக்கு தூக்கு தண்டனை..!

மற்ற எந்த நாடுகளில் இல்லாத அளவில் ஈரான் பெண்கள் மரண தண்டனைக்கு உள்ளாகுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் கணவனை கொலை செய்த வழக்கில் மூன்று பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரானில் செயல்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கடந்த வாரத்தில் மட்டும் ஈரானில் 32 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். 

3 பெண்கள் தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டனர்..இந்தக் கொலைகள் எல்லாம் குடும்ப வன்முறை காரணமாக நடந்துள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் ஈரான் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த ஆறு மாதத்தில் மட்டும் ஈரான் 250 பேரை தூக்கிலிட்ட உள்ளது. 

இந்தியாவில் கடந்த 2 வருடங்களில் 21% அதிகரித்த மரண தண்டனைகள்.. தேசிய சட்டப்  பல்கலை. ஆய்வில் தகவல் | According to Law University Report, number of  executions is increased last ...

இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினர் வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தன.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் அறிக்கையின் படி, ஈரானில் 2021-ல் மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *