ரஷ்யாவின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது –  ஐ நா சபை

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்பட்டதால்  ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ நா முன்னெடுத்து வருகிறது. அதன் பலனாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் சமாதானமாக  கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் தாக்குதல் மீது நடத்தப்படாது என ரஷ்யா உறுதியளித்துள்ளது. 

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனில் ஒடேசா துறைமுகம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. 

துறைமுகத்தின் மீது ரஷ்யா சராமரியாக ஏவுகணை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐ நா வன்மையாக கண்டித்து உள்ளது. 

நேற்று முன்தினம் ஒடிசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர்க்கப்பல் அளிக்கப்பட்டுள்ளதாக  உக்ரைன் கூறியுள்ளது.

இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனம் என உக்ரைன் அதிபர் ஜெலஸ்க்கி கூறியுள்ளார். இந்த தாக்குதல் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.