பாகிஸ்தானில் தொடரும் கனமழை..!!  இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக சித்ரல் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பர் பாகிஸ்தான் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் தகவல் அறிந்த மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகிறது.  கடந்த மாதம் பருவமழை தொடங்கியதில் இருந்து, பாகிஸ்தான் முழுவதும் பெய்த கனமழையால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதன் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில், கிட்டத்தட்ட 16 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதி, முழு சுற்றுப்புறங்களும் ஓரளவு நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள் புகை படங்கள் காட்டுகின்றன.

கராச்சியின் உள்கட்டமைப்பு காலநிலை தொடர்பான பேரழிவுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.