கத்தாரில் பயங்கரம்..!! நாய்களை சுட்டுக் கொன்ற மர்ம கும்பல்..!!!

கத்தார் நாட்டில் கண்ணில் பட்ட நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

பாதிக்கப்பட்ட நாய்களை கத்தார் தலைநகர் தோகாவில் இயங்கிவரும் பவ்ஸ் ரெஸ்கியூ கத்தார் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மீட்டு பராமரித்து வருகிறது. இங்குள்ள நாய்கள் சில அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் புகுந்து அங்கிருந்த சிறுவர்களை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  சிறுவர்கள் அந்த தொண்டு நிறுவனத்திற்கு அத்துமீறி நுழைந்து கண்ணில்படும் நாய்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி உள்ளார். 

இந்த தாக்குதலில் 29 நாய்கள் பலியாகின. பல நாய்கள் பலத்த காயம் அடைந்திருக்கின்றன. இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர் பிராண்ட் ரோனி ஹெலோ கூறுகையில் இது காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும்.  கத்தார் சமூகத்திற்கு அச்சுறுத்தல் தரக்கூடியதும் ஆகும். இதயத்தை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

கத்தாரில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த செயலுக்கு  பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published.