ஈரான் ஆதரவை பெறுவதற்கு ரஷ்ய அதிபர் புதின் புதிய முயற்சி..!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலக அளவில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஈரானின் ஆதரவை பெறுவதற்கு ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த பயணத்தில் புதின் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருடன் உலகளவில் நிலவும் உணவு நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் ரஷ்ய போர் குறித்து, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி பொமெனி கூறும்போது ஈரான் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேட்டோ படைகள் ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் என்றார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். இப்பயணத்தில் எதிர் வினையாகவும், உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஆதரவை காண்பிப்பதற்காகவே புதின் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

மேலும், ஈரான் – ரஷ்யா இரு நாடுகளும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பொருளாதாரத் தடைகளை சந்தித்துள்ள சூழலில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.