அதிபர் தேர்தல்: பின்வாங்கிய சஜித் பிரேமதாச..!! என்ன நடக்க போகிறது..?

அதிபர் தேர்தல் போட்டியில் முக்கிய வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாச திடீரென போட்டியில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில்  சஜித் பிரேமதாச அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் வாக்களித்து புதிய அதிபரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபர் டல்லஸ் அல்லஹபெருமா, ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திஸாநாயக்க ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இதையடுத்து, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சமாகி ஜன பலவேகயா கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டல்லஸ் அல்லஹபெருமாவை ஆதரிக்க தங்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

டல்லஸ் அல்லஹபெருமா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவர் தங்கள் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமாராக நியமிப்பார் என்றும் ரஞ்சித் மத்துமா பண்டார தெரிவித்துள்ளார்.சஜித் பிரேமதாசவை பிரதமராக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜி.எல். பெரிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *