இது நல்லா இருக்கே..!! கட்டிப்பிடிக்க காசு வாங்கும் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்..!!

மசாஜ், ஸ்பா போன்று கட்டிப்பிடி வைத்தியமும் ஒரு சேவையாக மாற ஆரம்பித்துள்ளது. கட்டிப்பிடிப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படுகின்றன என்று பல ஆராய்சிகள் கூறுகின்றனர்.  

அந்த வகையில் கட்டிப்பிடி வைத்தியம் தற்போது தொழிலாக மாறியிருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ட்ரெவர் ஹூடன் என்னும் இளைஞர் Embrace Connections என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். 

இந்த நிறுவனம் மூலம் கட்டிப்பிடி வைத்தியம் சேவை வழங்கப்படுகிறது. இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்காக ஒரு மணி நேரம் உடைய ஒரு செஷனுக்கு 75 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 7,100 ரூபாய் ஆகும்.

Is It OK to Hug Somebody You've Just Met? - PureWow

இதில் இளைஞர்கள், பெண்கள் முதல் முதியவர்கள் வரை கட்டிப்பிடி வைத்தியத்தை பெற்று வருகின்றனர். இந்த வைத்தியத்தின் மூலம் மன இறுக்கம் நீங்குவதாகவும் அவர்கள்  கூறுகின்றனர். 

இதுகுறித்து ஹூடன் கூறுகையில் கட்டி அணைப்பதை தாண்டி ஒருவருக்கு அக்கறை, பாசம், அன்பு ஆகியவற்றை நான் கொடுக்கிறேன். இதை எல்லோராலும் சாதாரணமாக செய்துவிட முடியாது. மனித உறவுகளை பலப்படுத்துவதற்கு இதை செய்கிறேன். இதன் மூலம் நான் மிகவும் மன நிறைவோடு இருக்கிறேன் என்றார். கட்டிப்பிடி வைத்தியத்திற்கு கட்டணம் வசூலிக்கும் நிகழ்வு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *