எகிப்து நாட்டில் சோகம்..!! சுறா தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழப்பு..!

எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணத்தில் செங்கடல் பகுதியில் சுறா தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளார்கள். எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில், ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது கடற்கரையில் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்த 2 பெண்களை சுறா தாக்கியது.
சுறா தாக்கியதில் படுகாயமடைந்த 2 பெண்களையும் மீட்ட அப்பகுதியில் இருந்த மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் இந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 2 பெண்களும் ஆஸ்திரேலியா, ரூமேனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்துக்கு பிறகு எகிப்தில் கடற்கரைகளில் குளிக்கவோ, பார்வையிடவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.