கழிவு நீரில் மதுபானம்..!!  அமோக வரவேற்பு கொடுக்கும் சிங்கப்பூர் மக்கள்..!!

சிங்கப்பூரில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட  பீர் மதுபானம் குடிமகன்களிடையே  அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறை போக்க  அண்டை நாடான மலேசியாவில் இருந்து குடிநீரை  சிங்கப்பூர் இறக்குமதி செய்து வருகிறது.

இருந்த போதிலும் குடிநீர் பற்றாக்குறை குறைந்த பாடில்லை. இந்நிலையில் கழிவு நீரை புற ஊதா கதிரியக்கத்தில் சுத்திகரித்து நியூ வாட்டர் என்ற பெயரில் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது சிங்கப்பூர். இது தவிர உப்பு நீரை குடிநீராக மாற்றி விநியோகம் செய்து வருகிறது.

இந்த குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்த புருவெர்க்ஸ் நிறுவனம் நியூவாட்டரை பயன்படுத்தி பீர் மதுபானம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீருக்கு சிங்கப்பூரில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக புருவெர்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 Reasons Why Age and Alcohol Don't Mix

இது குறித்து புருவெர்க்ஸ் நிறுவன தலைவர் மிட்ச் கிரிபோவ் கூறுகையில் நியூவாட்டரில் பீர் தயாரித்து பார்த்ததில் அது வழக்கமான சுவையுடன் இருந்தது. நீரில் உள்ள தாதுப் பொருட்கள் பீர் தயாரிப்புக்கான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்களிக்கின்றது. இது மக்களிடேயே எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என தெரிவித்தார். 

மிட்ச் கிரிபோவ் மைண்ட் வாய்ஸ் : சிங்கப்பூர் மக்கள் எத கொடுத்தாலும் குடிப்பாங்க போல சுத்தமான நீர் இல்லையேன்னு கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சேர்த்தி பீர் தயாரித்த இதையும் நல்ல இருக்கும் சொல்ராங்க.. !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *