ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் ஜி7 நாடுகள் மாநாட்டில் தீர்மானம்..!!

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஜி 7 நாடுகளின் மாநாடு ஜெர்மனியில் தற்போது நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் உறுதியுடன் நிற்க போவதாக அறிவித்துள்ள ஜி7 நாடுகள், இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.உலகில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதற்கு ரஷ்யா பொறுப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது ஜி7 நாடுகள் பொருளாதார தடை: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை  | Ukraine War - hindutamil.in

எனவே, உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிபந்தனையின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.ஐரோப்பாவின் உணவுப் பொருள் உற்பத்தி மையாக உக்ரைன் திகழ்ந்து வருகிறது.

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் 10 சதவீதமும், மைதாவில் 17 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெயில் 50 சதவீதமும் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படுகிறது.

போர் காரணமாக உக்ரைனில் உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் 4.7 கோடி மக்கள் உணவின்றி தவிக்கும் நிலை வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *