நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல்..!

நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பெரும்பான்மையை இழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பிரான்சில் தனிப்பெரும்பான்மை முறையில் 50 சதவீத வாக்குகளை நிச்சயம் பெற்று இருக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் யாரும்  தனிப்பெரும்பான்மை பெறவில்லை. அதிகபட்சமாக தற்போது அதிபராக இருக்கும் மக்ரோன் 27.85% வாக்குகளைப் பெற்று இருந்தார்.

அவரைத் தொடர்ந்து மரைன் லு பென் 23.15% வாக்குகளைப் பெற்றார். இந்நிலையில் இருவருக்கும் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.இதில், மேக்ரான் 58% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லீ பென் 42% வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து மேக்ரான் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Macron Loses Absolute Majority in Parliament as Opposition Surges - The New  York Times

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இறுதி கட்ட தேர்தலில் மேக்ரான் பெரும்பான்மையை இழந்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்ததால் அவர் புதிதாக சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற முடிவுகள் எங்கள் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்தார். கடந்த 2017 தேர்தலில் இருவருக்கும் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. அதில் 66.10% வாக்குகளைப் பெற்று மேக்ரான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *