இலங்கை நெருக்கடி: சீனா எடுத்த முக்கிய முடிவு!!
![](https://thenewslite.com/wp-content/uploads/2022/05/download-2.jpg)
இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு தொடர்வதால் மின்சாரத்தை நம்பி இருக்கும் மக்களின் வாழ்வு முடங்கியுள்ளது.
இந்நிலையில் சீனாவில் இருந்து மருந்து, உணவு பொருள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக 300 மில்லியன் யூவான் நிதியை இலங்கைக்கு வழங்க சீனா முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை பிரதமர் செய்தி பிரிவு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அதில் இரண்டு நாட்டு பிரதமர்களும் கடந்த மாதம் 22- ஆம் தேதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் பலனாக இந்த நிதியுதவியை சீனா வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சீன அறிந்து இருப்பதாகவும் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய முன்வருவதாக சீன பிரதமர் ஷி ஜின்பிங் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவிடம் கூறியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுதைய நிதி உதவியுடன் இலங்கைக்கு இதுவரையில் 500 மில்லியன் யூவான் வழங்க சீனா முன்வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.