கொஞ்ச நேரம் சும்மா இருப்பா …. ஹிட்லரை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிட எலான் மஸ்க்

கனடா எல்லையை கடக்கும் அனைத்து லாரி ஓட்டுநர்களும்  கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.இந்த அறிவிப்பிற்க்கு லாரி ஓட்டுனர்கள் கண்டனம் தெரிவித்ததோடு கட்டாயப்படுத்தி தடுப்பூசி தடுத்துக் கொள்ள வைப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக கனடாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கனடா அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலத்தில் போராட்டம் நடைபெறுவதால் வர்த்தகமும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்தார். ஹிட்லர் கூறுவது போல என்னை ஜஸ்டின் ட்ரூடோ உடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் இந்த வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் சிறிது நேரத்திலேயே அவர் அதை நீக்கி விட்டார்.

ஆனால் அவரின் கருத்துக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கருத்துக்காக எலான் மஸ்க் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்க யூதர் குழு தெரிவித்துள்ளது. தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் எலான் மஸ்க் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…