உக்ரைன் – ரஷ்யா போர் சூழல் …..  தாக்குதலுக்கு  தயாரான ரஷ்யா 

சோவியத் யூனியன் பிரிந்த போது உக்ரைன் தனி நாடாக அறிவிக்கப்பட்டது . அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா  பகுதியை ரஷ்யா கைப்பற்றியது . அதன் பிறகே உக்ரைன் – ரஷ்யாக்கு இடையே பிரச்னை தொடங்கியது.இந்நிலையில், உக்ரைன் எல்லையில் 1 லட்சம் போர் வீரர்கள் மற்றும் நவீன போர் கருவிகளை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது .

உக்ரேனிய எல்லைக்கு அருகாமையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய தரைப்படைகளில் 40% முதல் 50% வரை  உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள தாக்குதல் நிலைகளை நோக்கி நகர்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யர்கள் ஒரு சாத்தியமான படையெடுப்பிற்கு தயாராகி வருகின்றனர் என்பதையும்  சுட்டிக்காட்டினார்.  உக்ரைனிலும் அதற்கு அருகாமையிலும் ரஷ்யா 1,69,000 முதல் 1,90,000 பணியாளர்களைக் குவித்திருப்பதாக அமெரிக்கா இப்போது மதிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மாக்சர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படங்களில் எல்லைப் பகுதிகளில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…