இனி எதுக்கு வேலைக்கு போகனும் …. வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகை

உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. படித்தும் வேலை கிடைக்காமல் இளைஞர்கள் பலரும் தவித்து வருகின்றனர். சில சமயத்தில் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்கப்பெறுவதில்லை. இதனால் உணவு, வறுமை என இளைஞர்கள் வாழ்க்கை திண்டாடிவருகிறது. இந்நிலையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அல்ஜீரியா அதிபர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் வேலை இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

தற்போது, வேலை இல்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல் மத்ஜித் அறிவித்துள்ளார். வேலை இல்லாதவர்களும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்காகவே இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி வேலையில்லாத இளைஞர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்றும் அல்ஜீரியா அதிபர் அறிவித்துள்ளார். அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பால் அந்நாட்டு இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…