ஹிஜாப் அணியாவிட்டால் தலையை வெட்டுவோம் – பாகிஸ்தானில் நடந்த கொடூரம்

ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட மாணவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அவர் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.காஷ்மீரை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். பிளஸ்-2 படித்து வந்தார். இதன் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் திகதி வெளியான நிலையில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார்.

இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் ஹிஜாப் அணியவில்லை. அவர் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.இது தொடர்பாக ஒருவர் வெளியிட்ட பதிவில், கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள், சிறுமிகள் ஹிஜாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் காஷ்மீரில் நமது சகோதரி முகத்தை ஹிஜாப் கொண்டு மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை நாம் அனுமதிக்க முடியாது. அடுத்த முறை அவர் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டால் அவரது தலையை வெட்டுவோம் என்று கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து அரூசா பர்வேஸ் கூறுகையில், ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. அவர்கள் செய்யும் விமர்சனங்களை விட அல்லாவை நான் அதிகம் நேசிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…