இப்படி ஆயிடுச்சே சிவாஜி – பிரதமருக்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு 

 கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானில்  பல்வேறு அரசியல் குழப்பங்கள் நடந்து வருகின்றன. அந்நாட்டு ராணுவத்திற்கும் அரசுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக மோதல் ஏற்பட துவங்கியது.இது ஒருபுறமிருக்க பாகிஸ்தானில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு அத்தியாவசிய  பொருட்களின் விலையெல்லாம் கடுமையாக உயர்ந்தது.இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா, அரபு அமீரகம் போன்ற நாடுகளிடம் கடன் வாங்கினார். இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானின் பிரதமராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் இம்ரான் கான். இந்நிலையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இம்ரான் கானுக்குப் பதிலாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அஸிப் அலி ஸர்தாரியை பிரதமராக முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…