ரஷ்யா உக்ரைனுக்கிடையே அதிகரிக்கும் போர் சூழல்

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்ட காலமாக கிரீமியா தொடர்பாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ  படையில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த  ரஷ்யா தனது லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிபர் புதினை பலமுறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா உக்ரேனின் கிளிவ் பகுதியிலுள்ள தங்களது தூதரகத்தை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியேற்றப்படும் தூதரக அதிகாரிகளிலிருந்து சிலரை மட்டும் போலந்தின் எல்லைப்பகுதியில் நியமிக்கவுள்ளதாகவும், அதன் மூலம் உக்ரேனுடன் ராஜ தந்திர உறவை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அங்கு போர் மேகம் சூழ்ந்து இருப்பதால் உக்ரைன் அரசு தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள கலான்சக் நகரில், வதந்திகளால் கலவரம் வெடித்தால் எப்படி சமாளிப்பது என்று உக்ரைன் அரசு அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.உக்ரைன் எல்லையில் ரஷ்யா

இந்த ஒத்திகை பயிற்சிகளில் காவல்துறை, தேசிய பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மீட்புப் பணி பிரிவுகளை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் எம்.ஐ-8 வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இதேபோன்று எல்லையில் அமைந்துள்ள பிற ஊர்களிலும் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…