பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜப்பானில் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல்50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.இங்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீடிரென தீ பிடித்து தொழிற்சாலை முழுவதும் பரவியது.

இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். மேலும் ஒரு சில தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு தொழிலாளி என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…