போர் அடிச்சா இப்படியா பண்ணுவீங்க..!  6கோடி மதிப்புள்ள ஓவியத்தை கிறுக்கிய காவலர்

பொதுவாக நமக்கு சலிப்பாக இருந்தால் எதையாவது நமக்கு பிடித்தமான பொழுத்துப்போக்கை நாடி செல்வோம். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த காவலாளி ஒருவர் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஓவியத்தை கிறுக்கி உள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. போரிஸ் யெல்ட்சின் ஜனாதிபதி மையத்தில் அன்னா லெபோர்ஸ்காயாவின் மூன்று உருவங்கள் கொண்ட ஓவியங்கள் வைக்கப்பட்டது. பார்வை நேரம் முடிந்தவுடன் அந்த ஓவியத்தை பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மையத்தில் காவலாளியாக பணியாற்றிய  ஒருவர் அந்த ஓவியத்தை ஒரு பால்பாயிண்ட் பேனாவால் கிறுக்கியுள்ளார். இதனால் 6 கோடி மதிப்புள்ள நாத ஓவியம் சிதைந்து விட்டது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், அவர் அன்றைய தினத்தில் தான் பணிக்கு சேர்ந்துள்ளார். வேலையில் சேர்ந்து 24 மணி நேரத்திலே இந்த சம்பவம் நடந்துள்ளது. காவலாளியின் இச்செயலை அடுத்து, வேளைக்கு சேர்ந்த முதல் நாளிலே பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அந்த மையத்தின் மேலாளர் தெரிவித்தது, “இந்த ஓவியம் ஸ்டேட் ட்ரெட்டியாகோவ் கேலரியின் சேகரிப்பில் இருந்து கடனாகப் பெறப்பட்டது, இது தி வேர்ல்ட் ஆஸ் நோன்-அப்ஜெக்டிவிட்டி என்ற கண்காட்சிக்காக வழங்கப்பட இருந்தது.இது ஒரு அற்புத படைப்பு.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…