இந்தியர்களே பாதுகாப்பாய் இருங்கள் …. கனடாவில் தீவிரமாகும் போராட்டம் …. எச்சரிக்கை விடுத்த இந்திய தூதரகம்

கனடாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால்  மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக லாரி ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு கனடா மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து கனடா தலைநகரான  ஒட்டாவா நகரத்தில் போராட்டத்திலும் இறங்கினார்கள். இதனால் அதிபர் ஜஸ்டின் தலைமறைவானார்.

இந்நிலையில் கனடாவில் வலுவடைந்து  வரும் போராட்ட சூழல் காரணமாக, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. கனடாவில் நிலவும் தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களைத் தவிர்க்கவும், ஊரடங்குகளைப் பின்பற்றவும், ஊடகங்கள் மூலம் கனடாவில் நிலவும் சூழல்களை அறிந்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசர உதவி தேவைப்படுவோர் +1 6137443751 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். https://madad.gov.in/AppConsular/welcomeLink என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…